Shall we do by Mohamed Sadiq
அபு அம்மாராஹ்ஐம்பெரும் கடமைகள்கட்டுரைபொது ஆக்கங்கள்

கற்பனை… ஆனால் நிஜம்.type

கற்பனை… ஆனால் நிஜம்.

இனம் புரியாத கவலை.
இன்னும் என்ன செய்ய என்று புரியவில்லை
என்னை எதோ அழுத்துகிற உணர்வு 
எங்கும் எதிலும் தீர்வில்லை
உள்ளுக்குள் மிகப் பெரும் புயல்
உறவினர்களும் உதவவில்லை
எப்படி மீள என்று தெரியவில்லை
எப்போதும் அதே சிந்தனை
ஒரு பக்கம் சலிப்பு
ஒரு பக்கம் மன வெறுப்பு
உள்ளுக்குள் கோபம்
உலகே இன்று மாயம்

யாரிடம் சொல்ல
எப்படி மீண்டு வர
தீர்வுதான் கிடைக்குமா
இல்லை தீராமலே போகுமா?
டாக்டர் உதவிடுவாரா? இல்லை
டாஸ்மார்க்தான் உதவுமா?

தீர்வு கை அருகில் ஆனால்
தேடுவோமா நாம்????

நடு நிசி
நால்வரும் உறங்கும் நேரம்
மிருகங்களும் பறவைகளும்
மிதமாய் தூங்கும் நேரம்
யாரும் பார்க்காத
இருள் மயமான நேரம்
ஆரவாரமில்லாமல் முழு
அமைதி நிலவும் நேரம்
முதல் வானத்தில்
மொத்தத்தையும் தர
முழுப் பிரச்சினைகளையும் நீக்க
இறைவன் ஆவலோடு காத்திருக்கும் நேரம்…

தனிமையில்
தூக்கம் தொலைத்து
அழகிய வுளூவுடன்
ஆரவாரமில்லாமல்
தொழுகை பாயில்
தோழமையோடு
இறைவனை மிக அருகில் உணர்ந்து
தஹஜ்ஜத் தொழுது
திக்ர் செய்து
அழுத முகத்துடன்
ஆழமான நம்பிக்கையில்
இரு கைகள் ஏந்தி
இறைவனிடம்
மன்றாடி
மண்டியிட்டு
நம் குறைகளை முறையிட்டு
நம் தேவைகளை அழுது கேட்டு
நம் பாரத்தை அவனிடம் சாட்டி
நாம் தொழுது துஆ கேட்டால்

நமக்கு தீர்வு கிடைக்காதா என்ன?

இன்ஷா அல்லாஹ்… செய்வோம்.

மனதிலுள்ள பாரம் குறையும்
மகிழ்ச்சி ஆரம்பிக்கும்
சங்கடங்கள் மறைந்து போகும்
புத்துணர்வும் நம்பிக்கையும் துளிரும்
புது உலகம்கண்ணில் தெரியும்
தன்னம்பிக்கையோடு நடக்கலாம்
கூட துணைக்கு யாரோ இருக்கும் உணர்வு
அன்றைய நாள் வெற்றி நாளாக அமையும் என்ற நம்பிக்கை
எதையும் சமாளிக்க தயாராகும் உள்ளம்
ஆரோக்கியம் உடலில்
அத்தனை செல்வங்களும் நம்முல்..

செய்வோமா??????

வஸ்ஸலாம்
அபூ அம்மாராஹ்
Visit: www.abuammaarah.com

தூங்கிக் கொண்டிருக்கும் திறமைகள்… பெண்களுக்காக…

Previous article

ஷவ்வால் நோன்பு

Next article
Sadiq
அஸ்ஸலாமு அலைக்கும் நான் எழுத்தாளன் அல்ல, கவிஞனும் அல்ல, சிறந்த பேச்சாளரோ அல்லது மார்க்க அறிஞனோ அல்ல….. ஆனால் நானும் கொஞ்சம் எழுதுவேன், கவிதை வரைவேன், சிறிது பேசுவேன், மார்க்கம் அறிந்துள்ளேன். இறைவன் தந்த திறமைகளும் எனது சிறிய அறிவும் கொஞ்சமாவது சமுதாயத்துக்கு பயன்படட்டுமே என்ற ஆதங்கத்தில் பிறந்ததே இந்த WEBSITE … நாகரீகத்தின் உச்சியில் இருப்பதாக கூறிக்கொண்டு, கலாசார சீரழிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்த உலகத்தை, பலர் மத நெறிகளின் மூலமும், அன்பின் மூலமும், அஹிம்சை மூலமும், அழகிய நடவடிக்கைகள் மூலமும் திருத்த முயன்று கொண்டிருக்கின்றனர். உறவுகள் பேணப்படாமலும், பிறர் உணர்வுகள் மதிக்கப் படாமலும் மனிதாபிமானம் செத்துக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், ஏழைகள் ஏழைகளாகவும், பணக்காரர்கள் மேலும் பணம் படைத்தவர்களாகவும் மாறிக்கொண்டிருக்கும் இந்த மாயமான உலகில், நிச்சயமாக ஆக்க பூர்வமான எழுத்துக்கள் நல்ல சமுதாயத்தை உண்டாக்க வழி வகுக்கும். அதன் சிறு முயற்சியே இந்த WEBSITE இன்ஷாஅல்லாஹ். இந்த பக்கத்தில் தவறுகள் இருந்தால் மன்னித்து விடுங்கள். நல்ல கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அனுப்பி வையுங்கள். அனுப்ப வேண்டிய முகவரி; abuammaarah@yahoo.com இவன் Mohamed Sadiq

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *