அஸ்ஸலாமு அலைக்கும்,
Mufti Menk ஆடியோவிலிருந்து….
ஒரு Football Match ஐ எடுத்துக் கொள்ளுங்கள். முதல் 45 நிமிடத்தில் Match சாதாரணமாக நடந்து கொண்டிருக்கிறது. இரண்டு அணிகளும் நன்றாகவே போராடிகிறது. இருந்தும் ஏதோ ஒன்று மிஸ்ஸிங். ஆம் இரண்டு அணிகளும் சம நிலையில் இருக்கும்போது, இரண்டாம் பாதி 45 நிமிடம் மிகவும் பரபரப்பாக மாறுகிறது. இரண்டு அணிகளும் கடுமையாக போராடுகிறது. ஒவ்வொரு தருணத்தையும் தவற விடாமல் விளையாடுகிறது. அதிலும் இரு அணிகளும் சமமாக இருக்கும்போது extra time கொடுக்கப்பட்டால், சொல்லவே வேண்டியதில்லை, எதிர் பாராத முயற்சியும் போராட்டமும்.
ஆம், ரமலானின் முதல் பகுதி முழுமையான திருப்தி தராத நிலையில் சாதாரணமக பலருக்கும் சென்று விட்டது. சில நொடிகளில் பறந்து விட்டது. இன்னொரு பகுதி உண்டு. அதில் இப்போது நாம். முண்டியடித்து போட்டி போட்டி இன்னும் விறுவிறுப்பாக அமல் செய்ய வேண்டிய நேரம். செய்கிறோமா? சிந்தித்து வேகமாக செயல் பட வேண்டிய தருணம்.
அதேபோல்… 29 நோன்பில், நமக்கு 30 நோன்பு, நாளை பெருனாள் இல்லை நோன்பு தான் என்று அறிவிப்பு வந்தால் ஒரே எரிச்சல். ஆனால் அந்த Football match extra time போல, நாம் சிந்தித்தால்.. அந்த ஒரு நாள், ஒவ்வொரு அமலுக்கும் பல மடங்கு நன்மைகளை கொள்ளையடிக்க கிடைத்த வாய்ப்பு. மற்றொரு இரவு வணக்கம். இன்னொரு இப்தார்……. இன்னும் பல. ஆனால் நாம் எப்படி சிந்திக்கிறோம் என ஒரு கேள்வியை எழுப்பினார்.
சிந்திப்போம். வேகமாக செயல்படுவோம். இன்னும் சில நாட்கள், நன்மைகளில் முந்துவோம்….
தமிழில்
அபு அம்மாராஹ் (முஹம்மது ஸாதிக்)



