அபு அம்மாராஹ்கசப்பான உண்மைகள்தொடர் கட்டுரை

கசப்பான உண்மைகள் – பாகம் 2

கசப்பான உண்மைகள் – பாகம் 2

நவீன தொழில் நுட்பத்தின் அடிமைகள்

சமீபத்தில் “Phubbing” என்ற ஒரு புதிய வார்த்தை ஆங்கிலத்தில் நுழைந்துள்ளது. அதாவது ஒருவர் நம்மோடு பேசும்போது, நாம் மும்முரமாக போனில் ஏதாவது செய்து கொண்டிருப்பது. (The act of snubbing some one in a social setting by looking at your phone instead paying attention).

நவீன தொழில் நுட்ப வளர்ச்சியில், தொலைந்து போய்க் கொண்டிருப்பவர்கள் நாம். நான்கு நண்பர்கள் சேர்ந்து, ஆறு, தோப்பு என்று சுற்றுவதும், கூடி குலாவி சந்தோசமாக நாட்களை கழிப்பதும், நண்பர்கள் ஒருவரை ஒருவர் கலாய்ப்பதும், முழு மனதோடு உறவுகளை வரவேற்பதும் காணாமல் போய் விடுமோ என்று பயமாக இருக்கிறது.

இன்று பலரோடு பேசுவதற்கும், பல வீடுகள் தேடி செல்வதற்கும் எரிச்சலாக உள்ளது. கையில் ஒரு SMARTPHONE அல்லது TABLET PC. அதில் Whatsapp, Facebook, Linkedin, Twitter என்று இன்னும் பல. இதற்கு மேல், அத்தனை மெயிலும் உடனுக்குடன் வருகிறது. Bill Gates ஐ விட மிகவும் பிஸி. பசியெடுத்து நான்கு பேர் ஒன்றாக சாப்பிட போனால் அங்கேயும் எல்லோரும் போனில் busy. நாம் சில நிமிடம் ஆசையாக பேசும்போது, அவர்கள் கண்களும் கவனமும், தன கையில் இருக்கும் சாதனத்தில் இருக்கும். அவ்வப்போது அப்டியா, வேற என்ன? என்று ஏனோ தானோ பதில்கள். விருந்தினரை உபசரிக்க சொன்ன மார்கத்தில், இவர்கள் இவ்வாறுதான் உபசரிக்கிறார்கள்.

இவற்றை பாவிப்பதில் தப்பில்லை. ஆனால் அவற்றிற்கு அடிமையாக கிடப்பது மிகவும் பரிதாபம். உண்மையிலேயே சில சமயங்களில் ஒரு அவசர மெசேஜ் அனுப்ப வேண்டி இருக்கலாம். அப்போது அனுமதி பெற்று சில நிமிடம் செலவழிப்பதில் தவறில்லை. ஆனால், குடும்பத்தோடு சந்தோசமாக இருக்க வெளியே செல்வார்கள், அங்கு பொய் ஒவ்வொருவரும் அவர்கள் போனில் ஏதாவது செய்வார்கள். ஒரு பேச்சு இருக்காது. நான்கு நண்பர்கள் அல்லது உறவுகள் சந்திக்கும்போதும் இந்த நிலை. இதற்கு கல்யாண வீடுகளும் ஏன் மையத்து வீடுகளும் விதி விலக்கில்லை.

ஒரு முறை, ஒரு நண்பர் போனை துளாவிக் கொண்டே என்னோடு பேசிக் கொண்டிருந்தார். “ஏதும் அவசரமா?” என்று கேட்டேன். இல்லை என்றார். பின்னர் நான் சொன்னதும் கீழே வைத்து விட்டு பேச ஆரம்பித்தார். சரியாக 5 நிமிடத்துக்குள் போனை கையில் எடுத்து விட்டார். மீண்டும் நான் போன் வேண்டாமே என்றதும், Sorry சொல்லி போனை வைத்து விட்டு அதே போல் 5 நிமிடத்துக்குள் எடுத்து விட்டார். இவ்வாறு 3 முறை நடந்தது. பின்னர் நான் சொல்வதை நிறுத்தி விட்டேன். இதை பழக்கம் என்று சொல்வதை விட ஓர் நோய் என்று சொன்னாலும் தப்பில்லை. இது போன்ற செயல்பாடுகள் மனிதர்களை அவர்களது சூழலில் இருந்து வெளியே கூட்டி செல்கிறது. இவ்வாறு செல்பவர்கள் நாளடைவில் மன அழுத்தத்துக்கும், உடல் நோய்களுக்கும் ஆளாகிறார்கள்.

அப்படி என்னதான் செய்கிறார்கள் என்று பார்த்தால், பல சந்தர்பங்களில் உப்பு சப்பு இல்லாத விசயமாக இருக்கும். இது போக, சிலர் கழுத்து எப்போதும் ஒரு பக்கமாகவே இருக்கும். கழுத்து சுளுக்கி விட்டதோ என்று பார்த்தால், அதுவல்ல அவர்கள் போனில் அவ்வளவு பிஸி. பல நேரங்களில் தேவையற்ற பேச்சுக்கள். அறிமுகமில்லாதவர்களுடன் CHAT செய்ய ஆரம்பித்து இரவுகளை தூக்கமின்றி கழிப்பவர்கள் ஏராளம். பல ஆண்கள் பெண்கள் தடம் புரளவும்

இது வழி வகுக்கிறது.

தொழில் நுட்பம் என்றால் போன் மட்டுமா? இல்லை. விருந்தினர்கள் வந்தால் குழந்தைகளுக்கு பேச கற்றுக் கொடுத்த காலம் மாறி, இன்று பெற்றோர்கள் பெருமையாக சொல்வது “அவன் Xbox (Video Game ) இல் இருந்தால், வெளியுலகமே தெரியாது, யாரோடும் பேச மாட்டான் என்று”. இவர்களுக்கு புரியவில்லை, ஒரு நாள் இதற்கு மேல் தொழில் நுட்பம் கிடைக்கும்போது, அவனுக்கு உங்களையே தெரியாது என்று. அல்லாஹ் காப்பாற்றுவானாக.

இதே போல், பக்கத்தில் கடைக்கும், பள்ளிக்கும் போகக்கூட சிலருக்கு காரும் பைக்கும் வேண்டும். நாலடி நடக்க முடியாது. இதுவும் அடிமைத்தனமே.

இன்னொரு புறம் உருப்படியற்ற சில தொலைக்காட்சி நிகழ்சிகள். இந்நேரங்களில் சில வீடுகளுக்கு பொய் விட்டால், அவர்கள் நம்மை கவனிக்கும் விதத்தில், நாம் தெரியாமல் போய் விட்டோமோ என்று திண்டாட்டம் ஏற்பட்டு விடும். குடும்பத்துக்குள்ளேயே உறவுகள் அவர்களிடையே பேசும் நேரத்தை விட டிவி யோடு பேசும் நேரம் அதிகம். Walkman, IPOD ஓடு சுற்றும் பல இளைஞர்களும் இதில் அடங்குவர். வெளியூர் வாழ்கையில் பல bachelor ரூம்களில், இரவில் படுக்கு முன் மொபைலில் படம் பார்த்து விட்டு தூங்கும் பழக்கம். உடல்,பணம்,நேரம் அனைத்தும் அநியாயமாக செலவழிகிறது.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

ஒரு தொழில் நுட்ப சாதனத்தை பயன்படுத்துவதில் தப்பில்லை, அது நமது Control இல் இருக்கும் வரை, அதன் பயன்பாடு சரியாக இருக்கலாம். என்று நாம் அதற்கு அடிமையாக மாறுகிறோமோ, நிச்சயமாக அதன் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மையை விட நாம் இழப்பதே அதிகம். இதை புரிந்து நடக்க அல்லாஹ் உதவி புரிவானாக.

வஸ்ஸலாம்
அபு அம்மாராஹ்
Fedback: abuammaarah@yahoo.com

கசப்பான உண்மைகள் – பாகம் 1

Previous article

கசப்பான உண்மைகள் – பாகம் 3

Next article
Sadiq
அஸ்ஸலாமு அலைக்கும் நான் எழுத்தாளன் அல்ல, கவிஞனும் அல்ல, சிறந்த பேச்சாளரோ அல்லது மார்க்க அறிஞனோ அல்ல….. ஆனால் நானும் கொஞ்சம் எழுதுவேன், கவிதை வரைவேன், சிறிது பேசுவேன், மார்க்கம் அறிந்துள்ளேன். இறைவன் தந்த திறமைகளும் எனது சிறிய அறிவும் கொஞ்சமாவது சமுதாயத்துக்கு பயன்படட்டுமே என்ற ஆதங்கத்தில் பிறந்ததே இந்த WEBSITE … நாகரீகத்தின் உச்சியில் இருப்பதாக கூறிக்கொண்டு, கலாசார சீரழிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்த உலகத்தை, பலர் மத நெறிகளின் மூலமும், அன்பின் மூலமும், அஹிம்சை மூலமும், அழகிய நடவடிக்கைகள் மூலமும் திருத்த முயன்று கொண்டிருக்கின்றனர். உறவுகள் பேணப்படாமலும், பிறர் உணர்வுகள் மதிக்கப் படாமலும் மனிதாபிமானம் செத்துக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், ஏழைகள் ஏழைகளாகவும், பணக்காரர்கள் மேலும் பணம் படைத்தவர்களாகவும் மாறிக்கொண்டிருக்கும் இந்த மாயமான உலகில், நிச்சயமாக ஆக்க பூர்வமான எழுத்துக்கள் நல்ல சமுதாயத்தை உண்டாக்க வழி வகுக்கும். அதன் சிறு முயற்சியே இந்த WEBSITE இன்ஷாஅல்லாஹ். இந்த பக்கத்தில் தவறுகள் இருந்தால் மன்னித்து விடுங்கள். நல்ல கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அனுப்பி வையுங்கள். அனுப்ப வேண்டிய முகவரி; abuammaarah@yahoo.com இவன் Mohamed Sadiq

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *