அஸ்ஸலாமு அலைக்கும்,
கசப்பான உண்மைகள் – பாகம் 5
சிகரட் …. என் தோழன்
தலைப்புக்கு ஏற்றாற்போல், பலருக்கு இந்த கட்டுரை கசக்கத்தான் செய்யும்.
ஒரு முறை ஒருவர் மிகவும் காரசாரமாக சிகரட்டுக்கு ஆதரவாக, இதுவும் சாதாரண உணவு போலதான். தடை செய்யப்பட ஒன்றல்ல. இது எங்களுக்கு ரிலாக்ஸ் தருகிறது. மரணம் யாருக்கும் வரலாம், இதனால் என்று சொல்ல முடியாது, ETC என்று வாதிட்டார். ஒரு நிமிடம் “அப்படி என்றால் இந்த சாதாரண விசயத்தை உமது மனைவி மக்களோடு சேர்த்து குடிக்கலாமே. எல்லோருக்கும் டென்சன் குறைந்து ரிலாக்ஸ் ஆகலாமே என்றதும், திடுக்கிட்டு விட்டார்.
உண்மையை சொன்னால் ஒரு முஸ்லிம் நப்சுக்கு அடிமை ஆக மாட்டான், ஆனால் பல சிகரட் விரும்பிகள், தமது நப்சுக்கு அடிமை. அதிலிருந்து வெளியே வர முடியாமல் போக, அதனால் சிகரட்டை நியாயப் படுத்தி பேசுகிறார்கள .
பண வீண் விரயம். ஆரோக்கியத்துக்கு கேடு, அடுத்த சந்ததிக்கு தவறான வழி காட்டல், கெட்ட வாடை, இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.
முஹல்லாக்களில் முக்கிய பொறுப்பு, இஸ்லாமிய அமைப்புகளில் முக்கிய பதவி, சமூக நல இயக்கங்களில் முக்கிய நபர்…. ஆனால் சிகரட்டின் அடிமை, மீட்டிங் ஆரம்பிக்க முன்னும் பின்னும் சிகரட்டை ஊதித் தள்ளிவிடுவார்.
வெங்காய வாடையோடு தொழ வருவதை நபிகளார் தடை செய்தார்கள். உண்மையை சொன்னால் எத்தனை தொழுகைகளில் நமக்கு பக்கத்தில் உள்ள நபரின் சிகரட் வாடையால் நமக்கு தொழ முடியாத நிலை.
நோன்பு திறக்கும்போது, பொறித்த சாமான்களை சாப்பிடாதீர்கள், நோன்பின் மூலம் கிடைக்கும் உடல் ஆரோக்கியம் முழுமையாக கிடைக்காது என்று முஸ்லிம் மருத்துவர்கள் சொல்கிறார்கள். ஆனால் பலரும், நோன்பு திறந்த அடுத்த கணம், சிகரட்டை ஊதி தள்ளுகிறார்கள். இதோடு மக்ரிப் ஜமாஅத் வேறு. இவர்களை என்ன சொல்ல….
தன குழந்தைக்கு மிட்டாய் வாங்க கணக்கு பார்க்கும் பல தந்தைகள், நாளாந்தம சிகரட்டுக்கு செலவழிக்கும் காசு எத்தனை எத்தனை? இதனால் இருதய சிகிச்சைகளுக்காக பல மனைவி மக்கள் கையேந்தும் நிலை. இன்னும் பல..
இறுதியாக ஒன்றை கேட்கிறேன்… உங்கள் கை குழந்தைகளை அந்த சிகரட் பிடித்த வாயோடும் வாடையோடும் முத்தமிட்டு கொஞ்சுகிறீர்களே, இது அவர்களுக்கு நீங்கள் புரியும் நலமா அல்லது கேடா? சிந்தியுங்கள்.
முழு ஆதங்கத்தையும் இந்த கட்டுரையில் கொட்டி விட்டேன்.
இதை படித்துவிட்டு. ஒரு வீரமான ஆணேனும், “நான் சிகரட் குடித்துக் கொண்டிருந்தேன், ஆனால் இன்றிலிருந்து இந்த கெட்ட விசயத்தை விட்டு விட்டேன் என்று ஒரு கமெண்ட் போட மாட்டார்களா? அல்லது ஒரு பெண்ணாவது எனது கணவர்/தந்தை/மகன்/சகோதரர் இன்றிலிருந்து சிகரட்டை விட்டு விட்டார் என்று ஒரு கமெண்ட் போட மாட்டார்களா என்ற ஒரு நப்பாசையில் முடிக்கிறேன்
வஸ்ஸலாம்
அபு அம்மாராஹ்
Fedback: abuammaarah@yahoo.com



