அஸ்ஸலாமு அழைக்கும்,
கசப்பான உண்மைகள் – பாகம் 4
INFECTION – தொற்று
அந்தக் குழந்தைகளோடு விளையாடாதே, யாரையும் தொட்டுப் பேசாதே, கை குழுக்கினால் உடனே கழுவி விடு, ஒன்றாக சாப்பிடாதே, நோயாளிகளை பார்க்கப் போகாதே …. என்று இன்னும் பல அறிவுரைகள் நமக்குள். ஏன்? ஒரே பதில் INFECTION ஆகிவிடும்.
இன்றைய சுத்தமற்ற சூழலில், புதுப் புது நோய்கள் பெருகி வரும் காலத்தில், கலப்பட உணவு யுகத்தில் கொஞ்சம் கவனமாக இருப்பதும், உடல் நலத்தில் அக்கறை கொள்வதிலும் எந்த தவறும் கிடையாது. ஆனால் அதுவே மன நோயாக எல்லாவற்றிலும் நோய் தொற்று இருக்கும், இது நடந்தால் கட்டாயம் INFECTION ஆகி நமக்கு நோய் வந்து விடும் என வாழ்வதால், பலர் இன்று நோயாளிகள் ஆகிவிடுகிறார்கள். இன்று எண்ணத்தின் விந்தையை சொல்லும் பல ஆராய்ச்சிகள் இதற்கு எடுத்துக்காட்டு.
அண்மையில் ஒரு ரெஸ்டாரண்டில் ஒரு குழந்தை, ஒவ்வொரு 15 நிமிடத்துக்கு ஒரு முறை, ஒரு ANTIBACTERIA LIQUID வைத்து கையை சுத்தம் செய்கிறது. ஏனென்றால் சுத்தத்தை பேணுகிறதாம். மனதளவில் அதற்கு அடிமை ஆகிறது. அது மட்டுமா, பிற்காலத்தில் எந்த ஒரு சிறு விஷயத்தையும் தாங்க முடியாத குழந்தையாக மாறி விடுகிறது. ஆறு, மண், மேடு, பள்ளம் என விளையாடிய குழந்தைகள், உண்மையில் மிக ஆரோக்கியமாக வளர்ந்த குழந்தைகளே.
இன்று பல டாக்டர்களே வேண்டாம் ANTIBACTERIA, அது நம் நல்ல கெட்ட செல்கள் இரண்டையும் அழித்து விடுகிறது என்கிறார்கள்.
இஸ்லாமிய பார்வையிலேயே நோக்குவோமே. பின்வரும் ஒவ்வொன்றும் அழகிய சுன்னத்தான வழி முறை. எக்காலத்திற்கும் ஏற்ற மார்க்க வழிமுறை. ஆனால் INFECTION என சிந்திப்பவர்களுக்கு இவைகள் அனைத்தும் நோய் தொற்று வழிகளே. இதை தவிர்க்கவும் முற்படலாம். இதோ அவற்றில் சில.
- ஒருவரை சந்தித்தால், கை குலுக்கி சலாம் சொல்வதும், தோளோடு தோள் சேர்த்து முனாகத் பண்ணுவதும் சுன்னத்து.
- நமக்கு கடமையான தொழுகையில் தோளோடு தோள் சேர்ந்து நிற்க வேண்டும்.
- உம்ரா, ஹஜ்ஜில் பல இடங்களில் பலரை உரசிச் செல்ல வேண்டிய நிலை.
- ஒரே தட்டில் சேர்ந்து சாப்பிடுவதில் பறக்கத் என்கிறது இஸ்லாம்.
- குழந்தைகளை முத்தமிடுவதை அன்பின் வெளிப்பாடாக நபிகளார் சொல்லித் தந்தார்கள்.
- நோயாளிகளை சந்தித்து ஆறுதல் சொல்வது மிகப் பெரிய நன்மையை தருகிறது.
அப்படி எனில் மார்க்கமா? அல்லது அதற்கு முரணான சிந்தனையா? கொஞ்சம் சிந்தியுங்கள்.
உண்மையில் INFECTION என எப்போதும் சிந்திப்பவர்களிடம் ஒரு கேள்வி. ஒரு ஜனாஸாவை குளிப்பாட்டும்போது, பல விதமான அசுத்தங்கள் வெளிப்படும். அப்படி என்றால், நீங்களோ நானோ மரணித்தால் அதனை குளிப்பாட்ட போவது யார்?
சுத்தத்தை விரும்புவதோ அல்லது INFECTION வராமல் இருக்க பேணுதலாக இருப்பதோ தவறில்லை. ஆனால் கண்டதெல்லாம், கேட்டதெல்லாம் INFECTION ஆக காரணம் என நம்புவது, நமக்கு நாமே செய்யும் முட்டாள்தனம். இறுதியில் யார் இதை அதிகம் நம்புகிறார்களோ, அவர்களே அதிகம் டாக்டர்களை சந்திக்கிறார்கள்.
சிந்திப்போம், சரியாக செயல்படுவோம்.
மனதையும் உடலையும் பலப்படுத்தி, சுன்னத்தை பேணி, அல்லாஹ்வின் அருளுடன் ஆரோக்கியமாக வாழ்வோம், இன்ஷா அல்லாஹ்.
வஸ்ஸலாம்
அபு அம்மாராஹ்



