அஸ்ஸலாமு அலைக்கும்,
Nouman Khan ஆடியோவிலிருந்து….
ஒரு நாள் நான் சாக்லேட் சாப்பிடும்போது, என் இளைய மகள் பக்கத்தில் வந்து நின்று.. Daddy chocolate… என்றாள், நான் முடியாது என்றேன். மீண்டும் please dad.. என்றாள்.
சரி தருகிறேன். ஆனால் 10 செகண்ட் தான் சாப்பிட நேரம் தருவேன். அதன் பின் திருப்பி தர வேண்டும் என்று கூறி, சாக்லேடை கொடுத்தேன். முடிந்த வரை வேகமாக சாப்பிட்டால். 10 செகண்ட் முடிந்ததும் stop என்று சொல்லி சாக்லேட்டை மீண்டும் கேட்டேன். என்னையே சில நேரம் பார்த்துக் கொண்டு நின்று விட்டு, நான் கொடுத்ததை மறந்துவிட்டு அல்லது மறைத்துவிட்டு “It is Mine” (இது என்னுடையது) என்று கூறி விட்டு சாக்லேட்டுடன் ஒரே ஓட்டமாக ஓடி விட்டாள். குழ்ந்தைகள் இப்படித்தான்.
வீட்டில் தன் விளையாட்டுப் பொருளை தொட்டும் பார்க்காது. இன்னொரு குழந்தை வந்து தொட்டால்தான், தனக்கு அதை வைத்து விளையாட தோன்றும். குறிப்பாக வேறு வீட்டுக்கு போனால், அந்த குழந்தைகளின் toys ஐ வைத்து விளையாடிவிட்டு, வரும் போது அது தன்னுடையது என்று அழ ஆரம்பிக்கும்.
இது போல்தான். மனிதனும். கொஞ்சம் கொஞ்சமாக சம்பாதிக்க ஆரம்பித்ததும் தன் சொத்து அனைத்தும் தனக்கே உரித்தானது “It is Mine” என்று நினைக்க ஆரம்பித்து விடுகிறான்.
ஆனால் அல்லாஹ்வோ குர்ஆனில் பல இடங்களில், “நாம் வழங்கியவற்றிலிருந்து நீங்கள் செலவு செய்யுங்கள்” என்று கூறி இது உன் பொருளல்ல, அது தான் வழங்கியதே என நினைவு படுத்துகிறான்.
இன்ஷா அல்லாஹ், இந்த ரமாழான் மாதத்திலும் பிற மாதங்களிலும் அதிகம் அதிகம், அல்லாஹ் வழங்கியவற்றிலிருந்து சதகா செய்து நன்மையை கொள்ளை அடித்துக் கொள்ளுங்கள்.
Nouman Ali Khan ஸூராஹ் பகராஹ், ஆயாத் 3, விளக்கத்திலிருந்து
الَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِالْغَيْبِ وَ يُقِيْمُوْنَ الصَّلٰوةَ وَمِمَّا رَزَقْنٰهُمْ يُنْفِقُوْنَۙ
அவர்கள் எத்தகையோர் என்றால் ‘கைப் மறைவானவற்றை நம்புகிறார்கள். மேலும் தொழுகையை நிலைபெறச் செய்கிறார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து செலவும் செய்கிறார்கள்.
(அல்குர்ஆன்: 2:3)
தமிழில்
அபு அம்மாராஹ் (முஹம்மது சாதிக்)



