அபு அம்மாராஹ்கவிதைகள்

ரசித்ததுண்டா..

ரசித்ததுண்டா.

** நாளாந்தம் நடக்கும் பல சம்பவங்கள், நம் வாழ்வில் சம்பவமாக சென்று விடுகிறது.. அதனை ரசிக்கத் தவறி விடுகிறோம்.. அதனால் பிறந்தது இந்த கவிதை **

ரசித்ததுண்டா.

அதிகாலை பனியில்,
அணைத்துக் கொள்ளும் காற்றில் நடந்து ரசித்ததுண்டா.

அதிகாலை சூரிய வெளிச்சத்தில்,
காக்கை குருவி சத்தம் ரசித்ததுண்டா.

கடும் மழையில் ஒரு குடையில்,
குடும்பமாக நடந்து ரசித்ததுண்டா.

களைத்து வரும் வேலையில்,
காற்றின் சுகந்தம் ரசித்ததுண்டா.

கடற்கரை ஓரத்தில் கால்கள் நனைத்து,
அலைச்சத்தம் ரசித்ததுண்டா.

கடலோரம் மணல் வீடு கட்டி,
சிப்பிகள் பதித்து ரசித்ததுண்டா.

வயலோரம் நடந்து
நாட்டு நாடும் அழகை ரசித்ததுண்டா.

வாசல் திண்ணையில்,
கோலம் போடும் அழகை ரசித்ததுண்டா.

கூட்டத்தின் நடுவே,
உனை தேடும் மனைவியை ரசித்ததுண்டா.

குறும்பு செய்துவிட்டு,
பிதுங்க முழிக்கும் குழந்தையை ரசித்ததுண்டா.

குழந்தைகளின் வாய்ச்சண்டையின்,
வசனங்களை ரசித்ததுண்டா.

தோல்வியுற்றதும் அவர்கள்,
அழும் அழுகையை ரசித்ததுண்டா.

இது போன்ற,
சுமாரான கவிதையை ரசித்ததுண்டா.

இன்றிலிருந்து தானும் கவிஞன் ஆகி,
பிறர் கஷ்டங்களை ரசிக்கப் போவதுண்டா…

ஹா ஹா ஹா….

ஆக்கம்
அபு அம்மாராஹ்

A for APPLE (தமிழ்)

Previous article

இப்படியும் செய்யலாம் / உதவலாம். – பாகம் 2

Next article
Sadiq
அஸ்ஸலாமு அலைக்கும் நான் எழுத்தாளன் அல்ல, கவிஞனும் அல்ல, சிறந்த பேச்சாளரோ அல்லது மார்க்க அறிஞனோ அல்ல….. ஆனால் நானும் கொஞ்சம் எழுதுவேன், கவிதை வரைவேன், சிறிது பேசுவேன், மார்க்கம் அறிந்துள்ளேன். இறைவன் தந்த திறமைகளும் எனது சிறிய அறிவும் கொஞ்சமாவது சமுதாயத்துக்கு பயன்படட்டுமே என்ற ஆதங்கத்தில் பிறந்ததே இந்த WEBSITE … நாகரீகத்தின் உச்சியில் இருப்பதாக கூறிக்கொண்டு, கலாசார சீரழிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்த உலகத்தை, பலர் மத நெறிகளின் மூலமும், அன்பின் மூலமும், அஹிம்சை மூலமும், அழகிய நடவடிக்கைகள் மூலமும் திருத்த முயன்று கொண்டிருக்கின்றனர். உறவுகள் பேணப்படாமலும், பிறர் உணர்வுகள் மதிக்கப் படாமலும் மனிதாபிமானம் செத்துக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், ஏழைகள் ஏழைகளாகவும், பணக்காரர்கள் மேலும் பணம் படைத்தவர்களாகவும் மாறிக்கொண்டிருக்கும் இந்த மாயமான உலகில், நிச்சயமாக ஆக்க பூர்வமான எழுத்துக்கள் நல்ல சமுதாயத்தை உண்டாக்க வழி வகுக்கும். அதன் சிறு முயற்சியே இந்த WEBSITE இன்ஷாஅல்லாஹ். இந்த பக்கத்தில் தவறுகள் இருந்தால் மன்னித்து விடுங்கள். நல்ல கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அனுப்பி வையுங்கள். அனுப்ப வேண்டிய முகவரி; abuammaarah@yahoo.com இவன் Mohamed Sadiq

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *