கசப்பான உண்மைகள் – பாகம் 3
வெட்கம் என்ன விலை? – ஆடை குறைப்பு.
ஈமான் எனும் இறைநம்பிக்கை அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாக உள்ளது. வெட்கம் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஒரு கிளையாகும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா (ரழி) அறிவித்தார்கள்.
மாறி வரும் உலகில், கலாசாரமும் ஒழுக்கமும் மிக வேகமாக மாறி வருகிறது. எல்லாம் கால மாற்றம் என்று பழியை போட்டுவிட்டு நாம் கலாசார சீரழிவை நோக்கி செல்கிறோம். அவற்றில் மிக முக்கியமான ஒன்று வெட்கமின்மை. இது ஆண், பெண் இருவருக்கும் பொதுவானதேன்றாலும் இந்த கட்டுரையை பெண்களை மையமாக வைத்து எழுதுகிறேன். இதற்காக ஆண்கள் சுத்தவாளிகள் என்று கூறவில்லை. நபிகளார் அதிகமாக நரகில் பெண்களை கண்டேன் என்று கூறியதிலிருந்து நம் சகோதரிகளை பாதுகாக்கும் நோக்கமே. இன்னும் சொல்லப் போனால் கலாசாரத்தை உருவாக்கக் கூடிய தூண்கள் இவர்கள்.
தனிப்பட்டவர்களை விமர்சிக்கவில்லை. கெட்ட நோக்கத்திலும் பார்கவில்லை. இருந்தாலும் சில கசப்பான உண்மையை சொல்ல வேண்டும்.
ஒரு கூட்டுக்க் குடும்பம், மூன்று தலை முறைகளோடு, சாப்பிட வந்திருந்தார்கள். முதல் தலைமுறை பாட்டன், பாட்டி பாரம்பரிய ஆடை. மிக சாந்தமான மனப் பான்மை. இரண்டாம் தலைமுறை, மகள் அல்லது மருமகள் டெனிம், டீஷர்ட். மிக இறுகிய ஆடை, மூன்றாம் தலைமுறை 12 வயது இருக்கும் மகள், மினி ஸ்கர்ட், கையில்லாத டீஷர்ட். பலர் கண்ணுக்கும் குடும்ப ஒற்றுமை தெரிந்தாலும், இன்னொரு கசப்பான உண்மை அவர்களின் ஆடை மாற்றம், கலாசார சீரழிவின் பயணம். குறிப்பாக ஆடை ஒழுக்கம் சொல்லிக் கொடுக்கப் படாத குழந்தைகள் வெட்கத்தை தொலைத்து விடுகிறது. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு வேண்டுமென்று சொன்ன காலம் மாறி. டீஷர்ட், மினி, ஷோர்ட் எங்கள் சின்னம் என்று உருவாகிறது.
இந்த மோசமான சூழ்நிலையின் முதல் காரணம், காலத்தை குறை கூறி தப்பிக்க பார்க்கும் பெற்றோர்கள். ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் (உதாரணமாக 5 வயது), ஆடை முறையை அழகானதாக்காமல், Fashion என்ற பெயரில் அரை குறை ஆடைகளையும், “அவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள்” என்று இஸ்லாம் கண்டிக்கும் விதமான மெல்லிய ஆடைகளையும் அணிவித்து அழகு பார்க்கும் பெற்றோர்கள். ஆடை குறைப்பு என்றதும் மினி ஸ்கேர்ட் மட்டுமல்ல. Leggings என்ற பெயரில் உடல் அமைப்பை வெளிப்படுத்தும் ஆடைகளும் இதில் அடங்கும். Tight Fitting அபாயா உண்டா? என்று கேட்டு வாங்குவோரும் இதில் அடங்குவர்.
என்ன சொல்ல, ஆம்புல பசங்கலோடேதான் கெடக்குறா என்று பெற்றோர் சொல்வதும், Late Night அரட்டைகளும், ஆண் பெண் சரளமாக A -Jokes ஷேர் பண்ணுவதும், உரசி உரசி பேசுவதும், பெற்றோரும், குழந்தைகளும் ஒன்றாக உட்கார்ந்து கற்பழிப்பு காட்சிகளை கண்டு ரசிப்பதும், டிஸ்கோ, கிளப்கள் கூடுவதும் வெட்கமின்மையின் அடையாளமே. “ஜாஹிலிய்யா/அறியாமை காலத்தின்” முதல் அறிகுறியே வெட்கமின்மைதான். இன்றைய வெட்கமின்மையை பார்க்கும்போது “மீண்டும் ஒரு ஜாஹிலிய்யா காலம் வரும்” என்று இஸ்லாம் கூறுவது நியாபகம் வருகிறது.
தன 3 வயது மகளை காட்டி “இவளுக்கு இந்த பாடல் என்றால் உயிர்” அப்படியே நின்று விடுவாள் என்று டிவியில் மிக அசிங்கமான ஆடைகளோடு ஆடும் பாட்டை காட்டும் பெற்றோரை பார்த்து அழுவதா? சிரிப்பதா? மூன்று வயதில் ஒன்றும் புரியாதென்றாலும், இது தவறான ஆடை ஒழுககத்தை சொல்லிக் கொடுக்கும் முதல் படி. இன்னும் சொன்னால் இரு குழந்தைகள் “குத்தாட்டம் ஆடுமாம்” உடனே “JUDGES”, உங்களுக்குள் CHEMISTRY காணாது இன்னும் நெருக்கம் வேண்டும் என்று கூறுவதை குடும்பத்தோடு ரசிக்கும் பெற்றோர்கள், நாளை நடக்கும் அபாயத்தை மறந்து விடுகிறார்கள்.
இன்னொரு புறம், Office Function என்று இஸ்லாமிய ஆடைகளை மாற்ற சொல்லும் ஆண்களும், “தன் மனைவியின் மொத்த அழகையும், மேக்கப் மூலம் நண்பர்கள் முன் வெளிப்படுத்த நினைக்கும் கணவன்களும், மனைவியோடு உள்ள போடோவில் Facebook இல் அதிக like வாங்க துடிக்கும் கணவன்களும் அவர்கள் வெட்கத்தை தொலைத்துவிட இன்னொரு காரணம்.
இன்றைய கல்லூரி முறைகள், அலுவலக கலாசாரம் இதனை இன்னும் அதிகப் படுத்துகிறது. இது மிகப் பெரிய விடயம் என்பதால் இதில் அலசவில்லை. இருந்தாலும் கல்லூரிப் பெண்களின் வெட்கம் தொலையாமல் இருக்க, எல்லா நடவடிக்கைகளையும் நாம் எடுக்க வேண்டும்.
இன்னும் எழுதிக்கொண்டே போகலாம்….. உடனடி தேவை….
தைரியமிருந்தால்….
உங்கள் CUPBOARD களை திறந்து… ஆடைகளை சரி பார்த்து… அசிங்கமான பொது ஆடைகளை நீக்கி விடுங்கள்.
மேக்கப் அடிமை தனத்திலிருந்து வெளியே வாருங்கள்
அடிமையாக கிடக்கும் அசிங்கமான டிவி நிகழ்ச்சிகளை நிறுத்தி விடுங்கள்
குழந்தைகளுக்கு நேர ஒழுக்கங்களை சொல்லிக் கொடுங்கள்
அசிங்கமாக போடோக்கள் உள்ள புத்தகங்களை வாங்கி வீட்டில் அங்கும் இங்கும் போடுவதை நிறுந்துங்கள்
குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத, பேசக் கூடாத விடயங்களை செய்யாதீர்கள்
அழகிய இஸ்லாமிய சூழ்நிலையை உருவாக்குங்கள்
இன்ஷா அல்லாஹ்,
வெட்கத்தோடு வளர்வோம், நம் குழந்தைகளை வெட்கத்தோடு வளர்ப்போம்.
அல்லாஹ் நமக்கு அருள் புரிவானாக. ஆமீன்.
வஸ்ஸலாம்
அபு அம்மாராஹ்


