மனனமிடுவோம் – பாகம் 2
அஸ்ஸலாமு அலைக்கும்,
(பலருக்கு முக்கிய இஸ்லாமிய விடயங்கள் மனதில் இருப்பதில்லை, அதை சிறிதளவேனும் போக்கும் ஒரு முயற்சியே இது. இன்ஷா அல்லாஹ், பாகம் ஒன்றின் மூலம் இப்போது இஸ்லாமிய 12 மாதங்களும், உங்கள் மனதில் இருக்கும் என நம்புகிறேன்).
…
எம் பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்களின் மனைவிகள்
இன்றைய சமுதாயத்தில், இந்திய கிரிக்கட் அணியிலுள்ள அத்தனை பேர் பெயரும் தெரியும், நடிகர்கள் நடிகைகள் பெயர், குடும்ப விபரம் நன்றாக தெரியும். ஆனால் நாம் அதிகம் நேசிக்க வேண்டிய நபிகளாரின் மனைவிகள் பெயர் தெரியுமா? பலருக்கும் பதில் “இல்லை” என்பதே. அதிலும், பல பெண்களுக்கும் இது தெரிவதில்லை. எனது மகள் பெயர் ஜுவைரியா எனக் கூறும்போது, அல்ஹம்துலில்லாஹ் “நபிகளாரின் மனைவியின் பெயர் ஆயிற்றே” என்று கூறியவர்கள் ஒன்றோ இரண்டோ… பலரும் சொன்னது, “என்ன கேள்விப் படாத பெயராக வைத்துள்ளாய்” அல்லது “ஏன் ஊரிலே வைக்கும் பழைய பெயரை வைத்துள்ளாய்” என்பதே.
இன்ஷா அல்லாஹ், இன்றிலிருந்து நம் உள்ளத்தில் இப்பெயர்கள் நிலை கொள்ளட்டும்.
* கதீஜா (ரழி)
* ஸவ்தா (ரழி)
* ஆயிஷா (ரழி)
* ஹஃப்ஸா பின்த் உமர் (ரழி)
* ஜைனப் பின்த் குஜைமா (ரழி)
* உம்மு ஸலமா (ரழி)
* ஜைனப் பின்த் ஜஹ்ஷ் இப்னு ருபாப் (ரழி
* ஜுவைரிய்யா (ரழி)
* உம்மு ஹபீபா (ரழி)
* ஸஃபிய்யா (ரழி)
* மைமூனா (ரழி)
வஸ்ஸலாம்
அபு அம்மாராஹ்



