தூங்கிக் கொண்டிருக்கும் திறமைகள்… பெண்களுக்காக…
அஸ்ஸலாமு அலைக்கும்,
காலேஜில், அவர்கள் பத்து பேரும் நல்ல தோழிகள்…
அவர்களில் ஒருவள் (ஒருத்தி என்றும் வாசிக்கலாம்), மிகத் திறமையாக கட்டுரை எழுதுவாள். எப்போதும் கட்டுரைப் போட்டிகளில் முதலிடம்.
இன்னொருவள், அழகாக கவிதை எழுதுவாள், ஒவ்வொன்றும் உணர்வு பூர்வமானவை.
மற்றொருவள், சிறுகதையில் கில்லாடி. இலகுவாக கதை மூலம் மருத்துக்களை திணித்து விடுவாள்.
பேச்சுப் போட்டிகளில் கலக்குபவள் இன்னொருவள்.
இதற்கு ஈடாக விவாதப் போட்டி என்றாலே முதலில் வருபவள் மற்றொருவள்
எதற்கும் துணிந்த உடல் வலிமை பெற்றவள் இன்னொருவள்
எந்த குழந்தையும் வசப் படுத்தும் திறமையாளி இன்னொருவள்
கம்ப்யூட்டரில் கலக்குபவள் இன்னொருவள்.
தஜ்வீத் முறைப்படி அழகாக ஒதுபவள் மற்றொருவள்.
ஆங்கிலத்தை சரளமாக பேசுபவள் இறுதியானவள்.
இப்போது அவர்கள் எங்கே?
திருமணம் முடிந்து வெவ்வேறு இடங்களில்..
இந்தியா, இலங்கை, துபாய், கதார், சவூதி, லண்டன், ஆஸ்திரேலியா இன்னும் பல.
என்ன செய்கிறார்கள்… காலை கடமைகள் முதல் இரவு வரை.. ஒரே விதமான வேலை. இடைக்கிடையே டிவி, இன்டர்நெட், டெலிபோன்..
அவ்வப்போது நேரம் பறக்கத்தான் செய்கிறது என்ற கவலை.
நல்ல விசயம்தானே செய்கிறார்கள்? நிச்சயமாக.
கணவனை கவனிப்பது, பெற்றோர்களை, மாமா மாமிகளை பராமரிப்பது, அழகிய குழந்தை வளர்ப்பு,
சுவர்கத்துக்கு இட்டுச் செல்லும் முதன்மையான பண்புகள். பாராட்ட வேண்டும்.
ஆனால், நான் என் குடும்பம்.. என்ற சுயநலம் எப்படி நம் சமுதாயத்தை வளர்க்கும்?
அப்படி என்றால் இறைவன் ஏன் உங்களுக்கு அதிகமாக அந்த திறமைகளை தர வேண்டும்? சிந்தியுங்கள்.
என் உங்கள் திறமைகள் தூங்குகிறது? தினம் ஒரு பத்து நிமிடம் உங்களை நீங்கள் வெளிப் படுத்தினால், பல நல்ல நிகழ்வுகள் நிகழும், உங்களுக்கும் சந்தோசமும், மன திருப்தியும் கிடைக்கும்.
குடும்ப உறவுகள் சிதையாமல், கணவன் குழந்தைகளை கவனித்துக் கொண்டே, இஸ்லாமிய வளர்ச்சிக்கும், நல்ல சமுதாய எழுச்சிக்கும் கணவன் அனுமதியோடு பங்களிக்கலாமே?
அதற்காக, படி தாண்டி போக வேண்டிய கட்டாயமும் இல்லை.
வீதிப் போராட்டங்கள் மட்டும் தான் தீர்வு என்றும் சொல்லவில்லை.
வாரத்தில் இரு நாள் பக்கத்து வீட்டு குழந்தைகளுக்கு தஜ்வீத் சொல்லிக் கொடுக்கலாம்.
உங்கள் கவிதை, கதை, கட்டுரைகளை தொடர்ந்து நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இஸ்லாமிய வளர்ச்சிக்கு பாடுபடலாம்.
உங்கள் கட்டுரைகளை பத்திரிகைகளுக்கு அனுப்பியும், சொந்த blogspot மூலமும் சமுதாய சீரழிவுகளை ஒழிக்க உதவலாம்.
பெண்கள் மத்தியில் தஉவா பணிகளில் ஈடுபடலாம்.
POWERPOINT மூலம் இஸ்லாத்தை பரப்பலாம்.
பல நல்ல ஆங்கில இஸ்லாமிய புத்தகங்களை தகவல்களை மொழி பெயர்த்து வெளியிடலாம்.
வீடுகளில் 10 பெண்கள் சேர்ந்து இஸ்லாமிய வகுப்புகளை நடத்தலாம்,
online மூலம் வகுப்புகள் செய்யலாம் ETC
சிந்தியுங்கள்.. கடந்த நாட்களை யோசிக்காதீர்கள்.. வேகமாக செயற்படுங்கள்.
ஒரு பெண் நினைத்தால் ஒரு குடும்பத்தை, ஒரு சமுதாயத்தை நல்ல வழியில் மாற்றலாம் (தவறினால் தீய வழியிலும்தான்)
கணவன்மார்கள் ஒத்தழையுங்கள்… ஊக்கப் படுத்துங்கள்.
பெண்களும், நிதானமாக குடும்ப பொறுப்புகளில் குறை வைக்காமல், இஸ்லாமிய அடிப்படைக்கு உட்பட்டு கணவன் பொருத்தத்துடன், உங்கள் திறமைகள் சமுதாய வளர்ச்சிக்கு பயன்படுத்துங்கள்.
அன்று ஆயிஷா நாயகி, கதீஜா நாயகி, உம்மு சல்மா நாயகி இன்னும் பலர்
இன்றைய தலைமுறையிலும் பலர்
இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் உங்கள் முயற்சிகளை வெற்றியாக்கித் தருவான்.
வஸ்ஸலாம்
ஆக்கம் : கற்பனை தோழிகள்
அபு அம்மாராஹ் (முஹம்மது சாதிக்)
www.abuammaawah.com
FEEDBACK: rinosadiq@gmail.com



