அபு அம்மாராஹ்இப்படியும் செய்யலாம்தொடர் கட்டுரை

இப்படியும் செய்யலாம் / உதவலாம் – பாகம் 6

இப்படியும் செய்யலாம் / உதவலாம் – பாகம் 6சுத்தம் நம்மிலிருந்து……இன்று பல வீடுகளில், ஹாலில் உட்கார்ந்து பார்க்கும்போது, நாம் காணும் காட்சிகளில் சில; பல நாள் துடைக்கப் படாத மின்விசிறிகள் (FANS), ஒவ்வொரு மூளைகளிலும் படிந்திருக்கும் ஒட்டறைகள், பலநாட்கள் கழுவப்படாத கர்டன்கள், சோபா உரைகள்,அங்கொன்றும் இங்கொன்றுமாக கிடக்கும் Cup கள் என ஏராளம்….

“சுத்தம் ஈமானில் பாதி” என்று வலியுறுத்தியுள்ள இஸ்லாம் மார்கத்தில் பலமுஸ்லிம் வீடுகளின் நிலைஇப்படி.

இது இப்படி இருக்க, பலர், பலநாள் கழுவாத தன்னுடைய காலுரைகளுடனும் (Shocks), உடல்வாடைகளுடனும் பள்ளிவாயல்களுக்கும், வீடுகளுக்கும் வருவதுஇன்னும் பலருக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது.

“நபிகளார், வெங்காய வாடைகளோடு பள்ளிவாயல்களுக்கு வருவதையே தடைசெய்துள்ளார்கள்”.

இப்படியும் செய்யலாம் என்றதொடருக்கு மேற்கூறியவை பொருந்துமா?

நிச்சயமாக, சொல்களாலும், செயல்களாலும் மட்டுமல்ல, நம்மைநாம்கவனிப்பதும் ஒருவகையில் பிறருக்கு செய்யும் உதவியே.

முதலில் நம்மைநாம்சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தினமும் உடலைசுத்தப்படுத்துவதும், சுன்னத்தான அழகியமுறையில் ஆடைஅணிவதும், நறுமணங்கள் பூசிக்கொள்வதும், நாம்பிறருக்கு செய்யும் மிகப்பெரிய உதவியே.

வீடுகளிலுள்ள ஒவ்வொருவரும், எடுத்த பொருட்களை, எடுத்த இடத்தில் வைப்பதும், விடுமுறைநாட்களில் வீட்டை ஆளுக்கொரு வேலையாக பிரித்து சுத்தப் படுத்துவதும் நம் வீடுகளை அழகாக்குவதோடு நமக்கும் பிறருக்கும் மன மகிழ்ச்சியை கொடுக்கும்.

மாடி வீட்டிலுள்ள பலர்மாடிகளிலிருந்து கீழே எச்சில் துப்புவதும், நம் வீட்டிலிருந்து குப்பைகள் வெளியே போனால் சரி என்று பிறர் நலம் பாராது குப்பைகளை ஜன்னலினூடாக வீசுவதும், வாகனத்தில் பயணிப்போர் இதுபோலசெய்வதும் மிகவும் மோசமான செயலே.இதை நாம் நிறுத்துவதோடு, பிறருக்கும் எத்தி வைக்க வேண்டும்.

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சுத்தத்தை கற்றுக் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு விசயத்தையும் ரசித்து செய்ய பழக்கிக் கொடுக்க வேண்டும். சாப்பிடும்ஒழுங்கு முறை, குளிக்கும்ஒழுங்கு முறை, ஆடைஅணியும் ஒழுங்கு முறை என்பவற்றை சொல்லிக் கொடுக்க வேண்டும்.

நமதூர்களில் சில இடங்களில் வருடக்கணக்கில் குப்பைகள் கிடக்கும், பல தெருக்கள் அசிங்கமாக இருக்கும். இதை பல முறைதாண்டிச்சென்றாலும், எதுவும் செய்யத்தோணாது. பாடசாலை நாட்களிலேயே வகுப்பை சுத்தம் செய்ய களவடிக்க பழகிப்போனநம்மில் பலருக்கு இது இனிக்கவா செய்யும்?

இப்படி தெருக்களில் வீட்டு வாசலில் போகும் கழிவு நீர் கால்வாய்களாலும், தேங்கிக் கிடக்கும் நீர்களாலும், குவிந்து கிடக்கும் குப்பைகளாலும் கொசு, எலி பிரச்சினைகள் கூடுவதோடு, தொடர்ச்சியான துர்வாடையும் அருவருப்பும் ஏற்படுகிறது. டெங்கு, மலேரியா, காலரா போன்ற பல நோய்களுக்கும் இது காரணம் ஆகிறது.

இப்படி குப்பையாக இருந்த பல ஊர்களில், “சிரமதானப் பணி” என்று ஒரு சிலர் ஆரம்பித்து, அனைவரும் கைகோர்த்து ஒரே நாளில் ஊரையே சுத்தப் படுத்திய கதைகள் ஏராளம்.ஏன் நம்ஊர்களிலும் இப்படிசெய்யக் கூடாது? ஒவ்வொரு பள்ளிவாயல் நிர்வாகிகளும், அரசியல் தலைவர்களும் முயற்சி செய்தால், மக்களும் ஒத்துழைத்தால் இன்ஷாஅல்லாஹ் அந்த முஹல்லா தெருக்கள் ஒவ்வொன்றும், ஊரும் அழகாகஇருக்கும்.

அன்றொரு நாள்ஜும்மாஹ் தொழுகையின் பின், ஒரு முதியவர் பள்ளிவாயிலில் கிடந்த குப்பைகளை பிறக்கிக் கொண்டிருந்தார். ஏன் முதியவரே இன்னும் ஒரு மணி நேரத்தில் பள்ளி முழுவதையும் சுத்தப்படுத்துவார்கள்தானே என்றுகேட்டதும். “ஆம் அது எனக்கும் தெரியும்” ஆனால் நான்பிறக்கிய குப்பைகளுக்காக, பள்ளிவாயிலை சுத்தப் படுத்திய கூலியை இறைவன் எனக்கு தருவானதானே?” என்று பதில் கூறி என் வாயை அடைத்து விட்டார்.

நான் ஏன் செய்ய வேண்டும்? அவன் செய்யட்டுமே, இவன் செய்யட்டுமே, அரசாங்கம் செய்யட்டுமே, நிர்வாகம் செய்யட்டுமே என்று வாக்குவாதம் பண்ணி சுத்தமில்லாமல் தினமும் நாம் பயன்படுத்தும் இடங்களும் பொது இடங்களும் அதிகமே

பலர், ஆபீசிலும் இந்த நிலைதான். Office Boy தான் Tea Cup கழுவ வேண்டும் நான் ஏன் செய்யவேண்டும்? என்று கூறி,ஒரு நாள் முழுதும் கழுவாதTea Cup ஓடு இருப்பதோடு, சோம்பேறி ஆகிக் கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் மாற்றியோசித்து சிறுசுத்தங்களை செய்ய ஆரம்பித்தாலே ஆபீஸ்கள் சுத்தமாகி விடும். இன்னும் பல…

நாம் சுத்தமாக மட்டுமில்லாமல், நமதுகுடும்பம், நமது சுற்றத்தார், நமது தெரு, நமது நாடு என்று, ஒவ்வொருவரும், சுத்தத்தை பேண நம்மாலான உதவிகளை செய்யவேண்டும்.

அது பணத்தாலோ, பொருளாலோ, உடல் உழைப்பாலோ, அறிவுரைகளாலோ இருக்கலாம்.

செய்வோமா? இன்ஷாஅல்லாஹ்.

வஸ்ஸலாம்
அபு அம்மாராஹ்
abuammaarah@yahoo.com

மனனமிடுவோம் – பாகம் 1 – இஸ்லாமிய மாதங்கள்

Previous article

கசப்பான உண்மைகள் – பாகம் 1

Next article
Sadiq
அஸ்ஸலாமு அலைக்கும் நான் எழுத்தாளன் அல்ல, கவிஞனும் அல்ல, சிறந்த பேச்சாளரோ அல்லது மார்க்க அறிஞனோ அல்ல….. ஆனால் நானும் கொஞ்சம் எழுதுவேன், கவிதை வரைவேன், சிறிது பேசுவேன், மார்க்கம் அறிந்துள்ளேன். இறைவன் தந்த திறமைகளும் எனது சிறிய அறிவும் கொஞ்சமாவது சமுதாயத்துக்கு பயன்படட்டுமே என்ற ஆதங்கத்தில் பிறந்ததே இந்த WEBSITE … நாகரீகத்தின் உச்சியில் இருப்பதாக கூறிக்கொண்டு, கலாசார சீரழிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்த உலகத்தை, பலர் மத நெறிகளின் மூலமும், அன்பின் மூலமும், அஹிம்சை மூலமும், அழகிய நடவடிக்கைகள் மூலமும் திருத்த முயன்று கொண்டிருக்கின்றனர். உறவுகள் பேணப்படாமலும், பிறர் உணர்வுகள் மதிக்கப் படாமலும் மனிதாபிமானம் செத்துக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், ஏழைகள் ஏழைகளாகவும், பணக்காரர்கள் மேலும் பணம் படைத்தவர்களாகவும் மாறிக்கொண்டிருக்கும் இந்த மாயமான உலகில், நிச்சயமாக ஆக்க பூர்வமான எழுத்துக்கள் நல்ல சமுதாயத்தை உண்டாக்க வழி வகுக்கும். அதன் சிறு முயற்சியே இந்த WEBSITE இன்ஷாஅல்லாஹ். இந்த பக்கத்தில் தவறுகள் இருந்தால் மன்னித்து விடுங்கள். நல்ல கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அனுப்பி வையுங்கள். அனுப்ப வேண்டிய முகவரி; abuammaarah@yahoo.com இவன் Mohamed Sadiq

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *