அஸ்ஸலாமு அலைக்கும்,
“சின்ன சின்ன மாற்றங்கள்” என்ற WHATSAPP GROUP இல் இது வரை POST செய்த “சிறிய மாற்றங்களின்” தொகுப்பு இது.
அஸ்ஸலாமு அலைக்கும்,
மாற்றம் 1.
பல சந்தர்பங்களில் நாம் ஸலாம் சொல்லத் தவறி விடுகிறோம். வழமையாக சலாம் சொல்போரும் சில நேரம், என்ன மச்சான், சொல்லுஙக மச்சி, எப்டி இருக்க என்று நம்மை அறியாமல் பேச்சை ஆரம்பிப்போம். போனில் ஸலாம் சொல்ல மறந்து விடுவோம். இன்ஷா அல்லாஹ், இன்றிலிருந்து ஸலாம் தவராமல் சொல்வோம். ஆதாரம் உள்ளதா என்று தெரியாது. வீட்டினுள் நுழையும்போது ஸலாம் சொல்வதும் நல்ல பழக்கமே.
மாற்றம் 2.
அஸ்ஸலாமு அலைக்கும், , பீ அமானில்லாஹ், ஒருவர் நம்மிடம் விடை பெரும்போது சாதாரணமாக எல்லோரும் வழி அனுப்புவோம், ஆனால் எத்தனை பேர் நல்ல துஆவோடு அனுப்புகிறோம்? நம்மை விட அதிகம் உருது முஸ்லிம்கலும் பாகிஸ்தானியர்கலும் பீ அமானில்லாஹ் அல்லது அல்லாஹ் ஹாபிஸ் என்று வழி அனுப்புவாகள். அல்லாஹ்வின் பாதுகாவலில் செல்லுஙகள் என்று வழி அனுப்புவது ஒரு சிறந்த பழக்கமே. நாமும் செய்வோமா?
மாற்றம் 3
மிஸ்வாக். நம்மோடு எல்லா நேரதிலும் பேனா, மொபைல், கடிகாரம் என்று எல்லாம் இருக்கும். ஆனால் மிஸ்வாக் இருக்காது. நபிகளார் மிக விரும்பி செய்த ஒரு செயல். அழகிய சுன்னத். ஆரோக்கியதுக்கு டாக்டர்கள், வழியுருத்துவத்து. இன்ஷா அல்லாஹ், உடனே மிஸ்வாக் வாங்கி அதிகம் உபயோகிப்போம்.
மாற்றம் 4
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம். சாப்பிட முன் நம் ஒவ்வொருவரும் இதை சொல்கிரோம், நம் குழந்தைகளும்தான். ஆனால் சாதாரணமாக நாம் நொருக்கு தீனிகள் சாப்பிடும்போதும், வேகமாக தண்ணீர் குடிக்கும்போதும், பயணத்திலும் இன்னும் விளையாட்டின் நடுவிலும், etc பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம் சொல்கிறோமா? யோசிக்க வெண்டிய விசயம். இன்ஷா அல்லாஹ், இன்றிலிருந்து எல்லா நேரங்கலிலும் சாப்பிட முன் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம் சொல்வோம்.
மாற்றம் 5
அஸ்ஸலாமு அலைக்கும். தினமும் SHOE, SHOCKS, SLIPPERS போன்றவற்றை பல முறை போடுகிறோம், கழட்டுகிரோம். எத்தனை பேர் சுன்னத்தை பேணுகிறோம்? இன்ஷா அல்லாஹ், போடும்போது வலது காலையும் கழற்றும்போது இடது காலையும் முற்படுத்துவோம். இந்த MESSAGE கள் படித்து விட்டு போவதற்கு அல்ல. மாற்றஙகளை கொண்டு வருவதற்கு. இன்ஷா அல்லாஹ்.
மாற்றம் 6
தூங்கு முன், படுக்கை விரிப்பை உதருவது, ஆயத்துல் குர்ஸி ஒதுவது, சுப்ஹானல்லாஹ் 33 முறை, அல்ஹம்துலில்லாஹ் 33 முறை, அல்லாஹு அக்பர் 34 முறை கூறி கையில் ஊதி கைகள் எட்டும் அளவிற்கு உடம்பில் தேய்த்து விடுவது, சுன்னத்தே. இது அன்றைய அலுப்புகளையும் தீர்க்கும். இன்ஷா அல்லாஹ், இது வரை செய்யாவிட்டால், இன்றிலிருந்த்து செய்ய ஆரம்பிப்போம்.
மாற்றம் 7
வாழ்க்கையில் பல முறை இவ்வார்த்தைகளை சொல்ல மறந்து விடுகிறோம். எதிர்காலத்தில் ஒன்றை செய்யப் போவதாக சொல்லும் போது, இன்ஷா அல்லாஹ், ‘இன்ஷா அல்லாஹ்’ என்று சொல்வோம். நம் கண்களே பட்டுவிடும் அளவிற்கு அழகான குழந்தைகள், வீடு, வண்டி, பொருட்கள், etc பார்கும்போது ‘மாஷா அல்லாஹ்’ என்று சொல்வோம். இறைவன் அருட்கொடைகள் நமக்கு கிடைக்கும்போது ‘அல்ஹம்துலில்லாஹ்’ என்று சொல்வோம்.
மாற்றம் 8
நறுமணம். நபிகளாரின் முக்கிய சுன்னத்தில் ஒன்று, நறுமனத்தோடு இருப்பது. இது உடல் துர்வாடைகளை நீக்குவதோடு, மனதுக்கு இதம் அளிக்கிறது. இன்று பல வீடுகளில் அத்தர் பாட்டில்க்ளே இருப்பதில்லை. நம்மையும் வீட்டையும் நறுமனத்தோடு வைப்போம், இன்ஷா அல்லாஹ். தேடுங்கள் பத்திகளை, சாம்பிராணியை, அத்தரை அல்லது வேறு நறுமணங்களை…….
மாற்றம் 9.
அஸ்ஸலாமு அலைக்கும், தூக்க ஒழுங்குகளை மாற்றம் 6 இல் பார்த்தோம். விடுபட்ட இரண்டு விடயம், வலப்பக்கமாக தூங்குவதும், வுழூ செய்து விட்டு தூங்குவதும் மிக முக்கிய சுன்னத்தே. மலக்குகள் நமக்காக துஆ செய்கிறார்கள். இது வரை வுழூ செய்யாமல் தூங்க செல்பவர்கள் இன்றிலிருந்து செய்வோமா, இன்ஷா அல்லாஹ்.
மாற்றம் 10
அஸ்ஸலாமு அலைக்கும். இன்று வெள்ளிக்கிழமை. ஒவ்வொரு வெள்ளியும் சூராஹ் கஹ்ப் ஒதுவது நல்லதொரு சுன்னத். இதன் சிறப்புக்கு பல ஹதீஸ்கள் உண்டு. அதிலொன்று, இரு வாரங்களுக்கு இடையில், இது நமக்கு வெளிச்சம் தருகிறது. இன்ஷா அல்லாஹ் இன்றிலிருந்து ஒதுவோமா? முதலில் சிரமமாக இருந்தாலும், பின்பு வாழ்வில் ஒரு பகுதி ஆகிவிடும். இன்ஷா அல்லாஹ்.
*******************************
அஸ்ஸலாமு அலைக்கும், மாற்றங்களை இடை வெளி விட்டு அனுப்ப காரணம், ஒவ்வொரு மாற்றத்தையும் நாம் வாழ்வில் அமுல்படுத்த சில நாட்கள் தேவை என்பதே. இந்த மாற்றங்கள்
வாசிக்க மட்டுமல்ல. அல்ஹம்துலில்லாஹ் இரண்டு வாரமும் சூராஹ் கஹ்ப், வெள்ளியன்று ஓதினீர்களா? முதல் 9 சிறு மாற்றங்களையும் கொண்டு வந்து விட்டீர்களா? இப்போது தூங்க செல்லு முன் ஒழூ செய்து விட்டீர்களா?
*******************************
மாற்றங்கள் – தொகுப்பு
அஸ்ஸலாமு அலைக்கும், ஸலாம் சொல்லுதல், பீ அமானில்லாஹ் கூறுதல், மிஸ்வாக், சாப்பிட முன் பிஸ்மில்லாஹ், ஷு போடும்பொது வலது காலையும் கழட்டும்போது இடது காலையும் முற்படுத்தல், தூங்கு முன் தஸ்பீஹ், ஆயத்துல் குர்ஸீ ஓதல், தூங்கு முன் வுழூ செய்தல், அலஹம்துலில்லாஹ், மாஷா அல்லாஹ், இன்ஷா அல்லாஹ் கூறல், நறுமனம் பூசல், வெள்ளிக் கிழமை சூராஹ் கஹ்ப் ஓதல், என்பவற்றை உங்கள் வாழ்வில் நடைமுறை படுத்தி விட்டீர்களா? சிந்தியுங்கள், இன்ஷா அல்லாஹ் விரைவில் செயல்படுத்துங்கள் .



