Please dad By Mohamed Sadiq
அபு அம்மாராஹ்கட்டுரைபொது ஆக்கங்கள்

மகளின் கெஞ்சலும் தந்தை பாசமும்..

என்னதான் கண்டிப்பானவராக இருக்க முயன்றாலும் பல இடங்களில் தந்தைகள் மகளிடம் தோற்று விடுகிறார்கள்.

இரவு 11 மணி 
குளிர் காற்று வேறு..
வண்டியில் சென்று கொண்டிருக்கும்போது ஒரு குரல்
DAD.. DAD .. PLEASE .. DAD …
ஒரே ஒரு ONE DIRHAM ஐஸ் கிரீம்..
இரவு 11 மணிக்கு ஐஸ் கிரீமா? குறும் சிரிப்புடன் தந்தையின் கேள்வி…

மீண்டும் அதே குரல்.. இம்முறை அவள் தங்கையுடன்
DAD.. DAD .. PLEASE .. DAD …

மெதுவாக முகம் திருப்பினால்
பக்கத்தில் மனைவியின் பார்வை
இப்போது வாங்கிக் கொடுத்தால்
இரவு முழுதும் இருமப் போகிறார்கள் என்பது போல..

மீண்டும் அதே DAD DAD.. இன்னும் கொஞ்சலுடன்
ஒரு பக்கம் யோசனை.. இன்னொரு பக்கம் பாசம்
மழுப்ப வேண்டிய தருணம்
சரி சரி… ONE DIRHAM ஐஸ் கிரீம் மட்டும் தான் வாங்கித் தருவேன் (அதைத் தானே கேட்டார்கள்)
வேறு விலை கூடிய ஐஸ் கிரீம் எல்லாம் வாங்கித் தர மாட்டேன் (அதை கேட்கவே இல்லையே)
என்று கூறியவனாக
பாக்கெட்டிலிருந்து 3 DIRHAM ஐ எடுத்து நீட்டினார் பாசமுள்ள தந்தை
தனக்கும் சேர்த்து வாங்க.

மீண்டும் திரும்பிப் பார்த்தார் மனைவியை..
ம்ம்ம்மம்ம்மம்ம்ம்ம்
குழந்தைகளின் கெஞ்சலில்
பல தந்தைகள் தோற்றுத்தான்
போகிறார்கள்

குறிப்பு:
இஸ்லாத்துக்கு முரணான விருப்பங்களுக்கு எந்த தந்தையும் வளைந்து கொடுக்கக் கூடாது.

வஸ்ஸலாம்
அபு அம்மாராஹ் (முஹம்மது சாதிக்)

 

ஷவ்வால் நோன்பு

Previous article

The Secrets to a Rich experience in Salah (கேட்டதில் பிடித்தது)

Next article
Sadiq
அஸ்ஸலாமு அலைக்கும் நான் எழுத்தாளன் அல்ல, கவிஞனும் அல்ல, சிறந்த பேச்சாளரோ அல்லது மார்க்க அறிஞனோ அல்ல….. ஆனால் நானும் கொஞ்சம் எழுதுவேன், கவிதை வரைவேன், சிறிது பேசுவேன், மார்க்கம் அறிந்துள்ளேன். இறைவன் தந்த திறமைகளும் எனது சிறிய அறிவும் கொஞ்சமாவது சமுதாயத்துக்கு பயன்படட்டுமே என்ற ஆதங்கத்தில் பிறந்ததே இந்த WEBSITE … நாகரீகத்தின் உச்சியில் இருப்பதாக கூறிக்கொண்டு, கலாசார சீரழிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்த உலகத்தை, பலர் மத நெறிகளின் மூலமும், அன்பின் மூலமும், அஹிம்சை மூலமும், அழகிய நடவடிக்கைகள் மூலமும் திருத்த முயன்று கொண்டிருக்கின்றனர். உறவுகள் பேணப்படாமலும், பிறர் உணர்வுகள் மதிக்கப் படாமலும் மனிதாபிமானம் செத்துக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், ஏழைகள் ஏழைகளாகவும், பணக்காரர்கள் மேலும் பணம் படைத்தவர்களாகவும் மாறிக்கொண்டிருக்கும் இந்த மாயமான உலகில், நிச்சயமாக ஆக்க பூர்வமான எழுத்துக்கள் நல்ல சமுதாயத்தை உண்டாக்க வழி வகுக்கும். அதன் சிறு முயற்சியே இந்த WEBSITE இன்ஷாஅல்லாஹ். இந்த பக்கத்தில் தவறுகள் இருந்தால் மன்னித்து விடுங்கள். நல்ல கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அனுப்பி வையுங்கள். அனுப்ப வேண்டிய முகவரி; abuammaarah@yahoo.com இவன் Mohamed Sadiq

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *