அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்மையில் Sheikh Muiz Bukhary அவர்களின் ஜும்மாஹ் பயானை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது.
பினவரும் ஹதீஸை மிக எளிய வழியில் விளக்கினார்.
”யார் ரமளான் மாதத்தின் நோன்பை நோற்று பின்னும் அதைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பையும் நோற்கின்றாரோ (அவர்) வருடமெல்லாம் நோன்பு நோற்றதற்குச்சமம்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)
அதாவது, அல்லாஹ்விடத்தில் நாம் நல்ல நிய்யத்துடன் செய்யும் ஒரு நற்செயலுக்கு குறைந்தது பத்து நன்மைகள் கிடைக்கும் என்பது நாம் அறிந்ததே. இந்த அடிப்படையில் ரமளான் ஒரு மாத நோன்பிற்கு பத்து மாத கூலியும், ஷவ்வால் மாத ஆறு நோன்பிற்கு அறுபது நாட்கள் (அதாவது 2 மாதம்) நோன்பு பிடித்த நன்மைகளும் கிடைக்கும். ஆக 30 + 6 நாட்கள் நோன்பு பிடிக்க நமக்கு ஒரு வருடம் நோன்பு பிடித்த கூலி மொத்தமாக கிடைக்கிறது என மிக எளிய வழியில் கூறினார்
அல்லாஹ் மிகவும் நன்கறிந்தவன்.
இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் நம் அனைவருக்குன் இப்பாக்கியத்தை தருவானாக.
வஸ்ஸலாம்
அபு அம்மாராஹ்
(முஹம்ம்து ஸாதிக்)



