அஸ்ஸலாமு அலைக்கும்,
50 ஓவர் கிரிக்கெட் மேட்சில் கடைசி 10 ஓவர்கள் பார்ப்பதில் ஒவ்வொருவருக்கும் குசி. bowlers உம batsman உம ஒவ்வொரு பந்தையும் ரசித்து விளையாடுவார்கள்.
Football இல் கடைசி 15 நிமிட கேமில் ஒவ்வொரு Player உம மிகக் கவனமாக விளையாடுவார்கள். பார்வையாளர்களும் கண் சிமிட்டாமல் பார்ப்பார்கள்.
ஓட்டப் பந்தயத்தில் அல்லது கார் ரேசில் கடைசி சில சுற்றுகளில் அதிக வேகமும் விறுவிறுப்பும் இருக்கும். ஒவ்வொரு செகண்டிலும் அதிக வெளிப்பாடு இருக்கும்.
பரீடசையின் இறுதி சில நிமிடங்களில், ஒவ்வொரு நிமிடத்திலும் மிக அதிக விடைகளை எழுதுவோம்.
இவையெல்லாம் ஏன்? அது ஒரு முக்கிய கட்டம். கேம் முடியும் தருவாய், பல தோல்வியாளர்களை வெற்றியாகும் தருணம். கொஞ்சம் அதிக முயற்சியால், வெற்றி, கண்ணியம், பரிசுகளை தட்டிச் செல்லலாம்.
ஆம்….
கடைசி பத்து நாட்கள்.
ஒவ்வொரு செகண்டும் பயன்படுத்த வேண்டிய தருணம்.
பாவ மன்னிப்புகளின் முக்கிய கட்டம் .
பல மடங்கு கூலிகள்.
லைலதுல் கத்ர் எனும் புதையல்
தவற விடாதீர்கள்
கிரிக்கட்டையும் Fottball யும் கண் சிமிட்டாமல் அனுபவித்த நீங்கள்…. அதிகம் கண்ணுறங்காமல்.. இந்த நாட்களை அனுபவியுங்கள்.
இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் நேரத்தில் பரக்கத்தை உண்டாக்கி, எஞ்சிய ரமலான் நாட்களை நல்ல வழியில் பயன்படுத்த உதவுவானாக.
COUNTDOWN STARTS….
வஸ்ஸலாம்
அபு அமாராஹ்



