ஸுஜூத் அஸ் ஸுகூர்.
அஸ்ஸலாமு அலைக்கும்,
** மதிப்பிற்குரிய பிலால் பிலிப்ஸ் ஆடியோவின் தமிழாக்கம்**
இன்று நம்மில் பலருக்கு, வாழ்க்கையில் எப்பொழுதுமே டென்சன் (மன அழுத்தம்).
சொல்லப் போனால் சிலர் தன் உயிரையே மாய்த்துக் கொள்ளும் நிலை. இறைவனின் கத்ரை புறிந்துகொள்ளாத நிலை.
டென்சனாக இருக்கும்போது நாம் நம்மில் உள்ள பல நல்ல விசயங்களைபார்க்க மாட்டோம். எப்பொழுதும் நம்மை நாமே குறை சொல்லிக்கொண்டு இருப்போம். இன்னும் சொன்னால் எல்லாவற்றையும் ஜின், கண்ணூரு என குறை கூறுவோம்.
இஸ்லாம் நம் மன அழுத்தத்துக்கு மிக அழகிய ஒரு சிறிய வழியைசொல்லித் தருகிறது. அதுதான் ஸுஜூத் அஸ் ஸுகூர். அதாவதுநபிகளாருக்கு எப்போது ஒருமகிழ்ச்சியான விசயம் நடந்தாலும், உடனே அவர்கள் தன் முகத்தை தரையில் சாய்த்து ஸுஜூத் செய்வார்கள். பின் தன் நாளாந்த நடவடிக்கைகளை தொடர்வார்கள். இது அல்லாஹ் நமக்கு தந்த அருட்கொடைகளுக்கு நாம் செய்யும் நன்றிக் கடனாகும். நம்மில் பலர் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த மறந்து விடுகிறோம்.
சில விளையாட்டு வீரர்கள், வெற்றி பெற்றதும் நிலத்தை முத்தமிடுவார்கள். இது ஸுஜூத்அஸ் ஸுகூர் அல்ல. ஸுஜூத் அஸ்ஸுகூர் என்பது நாம் 2-3 நிமிடம் ஸுஜூத் செய்து, சுப்ஹான ரப்பியல்அஃலா வபிஹம்திஹி போன்ற திக்ர்களை ஓதி, அல்லாஹ் தந்த அருட் கொடைகளை உணர்ந்து நன்றி செலுத்துவதாகும். இந்நிலையில் நாம் மனஅழுத்தத்தின் போது காணமுடியாத பல நல்ல விசயங்களை உணர்ந்து அவனுக்கு நன்றிசெலுத்துகிறோம். இது ஸுன்னாஹ் முஹக்கதா என கூறப்படுகிறது. நாம் செய்யும் இந்த ஸுஜூத் அஸ் ஸுக்ரை முழுமையாக மனமார செய்யவேண்டும். இது மன அழுத்தங்களை நீக்கி புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்.
ஒரு வீடியோவில் Scholar Bilal Philips, சுமார் 700 பேரிடம், “போன வாரம் எத்தனை பேர் ஸுஜூத் அஸ் ஸுகூர் செய்தீர்கள” என கேட்டபொது ஒருவரும் கை உயர்த்தவில்லை. பலருக்கு அதுபற்றி தெரியவும் இல்லை. இது, இன்று நாம் இஸ்லாத்தில் பல நல்ல விசயங்களோடு தொடர்பில் இல்லாமல் இருப்பதை காட்டுகிறது.
நபிகளார் தம் வாழ்வில் அதிகம் செய்த ஒரு நல்ல அமல். நாம் செய்ய தவறிவிட்ட ஒரு நல்ல அமல்.
முக்கியமாக ஸுஜூத் அஸ் ஸுகூர் பற்றி தெரிய வேண்டிய விசயங்கள்.
இதற்கு வுழூ தேவை இல்லை
ஒரு ஸுஜூத் மட்டுமே செய்ய வேண்டும்
குளிப்பு கடமையான ஆண்களும் பெண்களும் செய்யலாம்
மாதவிடாய் உள்ள பெண்களும் இதை செய்யலாம்.
நபிகளார் வாழ்வை பின்பற்றும் நாம், இன்ஷா அல்லாஹ், இன்றிலிருந்து இதை தொடங்குவோமா?
வஸ்ஸலாம்
அபு அம்மாராஹ்
(முஹம்ம்து ஸாதிக்)



