அபு அம்மாராஹ்கட்டுரை

பேஸ்புக்கில் சிதையும் சகோதரத்துவம்

பேஸ்புக்கில் சிதையும் சகோதரத்துவம்.

முகப் புத்தகம் (FACEBOOK) மூலம் பல நல்ல முகங்களை (உறவுகளை) தேடி வந்தால், இன்று முகப் புத்தகம் (FACEBOOK) இல்..
பல சகோதரர்கள் தனது முகமும் தனது இயக்கம் அல்லது அமைப்பின் முகமும் மற்றவர்களால் பாராட்டப்பட வேண்டும் என்று துடிப்பதும், மற்ற சகோதரர்களின் தனிப்பட்ட முகத்திரைகளை கிழிக்க வேண்டும் என்று போட்டி போடுவதும், இன்னொரு சகோதரனை முகம் குப்புற செய்து மண் கவ்வ வைப்பதால் சந்தோசப் படுவதும், முகம் பார்த…்து சலாம் சொல்லி வந்தவர்கள் இந்த முகப் புத்தக (FACEBOOK) சண்டைகள் மூலம் முகம் திருப்பி செல்வதும், முகஸ்துதிக்காக சிலர் சிலருக்கு பாராட்டு பாடுவதும், முகம் தெரியாத அடையாளத்திலிருந்து பிறர் குறைகளை அலசுவதும் சாதாரணமாகிவிட்டது.

தொழுகை ஆரம்பத்தில் வஜ்ஜஹ்து.. (உன் பக்கம் முகத்தை திருப்பிகிறேன்) என்று தொழுகையை ஆரம்பிக்கும் நாம், இந்த முகப் புத்தகத்தின் மூலமாக நாளை மறுமையில் நம் முகத்துக்கு எதிராக பல சாட்சிகளை உருவாக்குவதோடு நாமும் பல முகங்கள் நரகம் செல்ல சாட்சிகளாகிக்கொண்டிருக்கிறோம்.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் – பழைய மொழி
அகத்தின் அழகு முகப்புத்தக (Facebook) எழுத்தில் தெரியும் – புது மொழி

உங்கள் எழுத்துக்களையும், கமெண்ட்களையும் (பிறரை காயப்படுத்தாமல்) அழகாக்கிக் கொள்ளுங்கள்.

அல்லாஹ் நம் அனைவரையும் காப்பாற்றுவானாக.

இப்படியும் செய்யலாம் / உதவலாம் – பாகம் 5

Previous article

நவீன உலகில் நம் வீட்டு குழந்தைகள் ….

Next article
Sadiq
அஸ்ஸலாமு அலைக்கும் நான் எழுத்தாளன் அல்ல, கவிஞனும் அல்ல, சிறந்த பேச்சாளரோ அல்லது மார்க்க அறிஞனோ அல்ல….. ஆனால் நானும் கொஞ்சம் எழுதுவேன், கவிதை வரைவேன், சிறிது பேசுவேன், மார்க்கம் அறிந்துள்ளேன். இறைவன் தந்த திறமைகளும் எனது சிறிய அறிவும் கொஞ்சமாவது சமுதாயத்துக்கு பயன்படட்டுமே என்ற ஆதங்கத்தில் பிறந்ததே இந்த WEBSITE … நாகரீகத்தின் உச்சியில் இருப்பதாக கூறிக்கொண்டு, கலாசார சீரழிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்த உலகத்தை, பலர் மத நெறிகளின் மூலமும், அன்பின் மூலமும், அஹிம்சை மூலமும், அழகிய நடவடிக்கைகள் மூலமும் திருத்த முயன்று கொண்டிருக்கின்றனர். உறவுகள் பேணப்படாமலும், பிறர் உணர்வுகள் மதிக்கப் படாமலும் மனிதாபிமானம் செத்துக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், ஏழைகள் ஏழைகளாகவும், பணக்காரர்கள் மேலும் பணம் படைத்தவர்களாகவும் மாறிக்கொண்டிருக்கும் இந்த மாயமான உலகில், நிச்சயமாக ஆக்க பூர்வமான எழுத்துக்கள் நல்ல சமுதாயத்தை உண்டாக்க வழி வகுக்கும். அதன் சிறு முயற்சியே இந்த WEBSITE இன்ஷாஅல்லாஹ். இந்த பக்கத்தில் தவறுகள் இருந்தால் மன்னித்து விடுங்கள். நல்ல கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அனுப்பி வையுங்கள். அனுப்ப வேண்டிய முகவரி; abuammaarah@yahoo.com இவன் Mohamed Sadiq

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *