அபு அம்மாராஹ்கவிதைகள்

நவீன உலகில் நம் வீட்டு குழந்தைகள் ….

நவீன உலகில் நம் வீட்டு குழந்தைகள் ….

என் பிள்ளைக்கு 5 வயதில் ABCD தெரியாவிட்டால் எனக்கு கேவலம்.
அவனுக்கு முப்பதிலும் “அளிப் பா” தெரியா விட்டால் அதிலில்லை ஆத்திரம்.

பன்னிரண்டு ஆங்கில மாதமும் சொல்லும் மேதாவி
ஆனால் இஸ்லாமிய முதல் மாதமும் தெரியாத கோமாளி

அத்தனை தலைவர் பெயரும் அத்துப் பிடி
ஆனால் நான்கு கலீபாக்கள் பெயரோ மிகப் பெரும் பிரமையடி …

தினமும் படித்து விடுவான் பாடசாலை புத்தகங்கள்
திரும்பிக் கூட பார்க்க மாட்டான் குர்ஆன் எனும் புத்தகம்

பத்து நிமிடம் விடாமல் சொல்வேன் படி படி
பல நாள் ஒதாவிட்டாலும், கவலை இல்லை ஒரு பிடி

அட்டவணை அத்தனையும் விரல் நுனியில்
அஸ்மா உல் உஸ்னாவின் ஐந்து பெயர் கூட தொலை தூரத்தில்

பல திருக்குறளும், புறநானூறும் அவன் நினைவில்
பத்து சூரா கூட இல்லை அவன் மனதில்

தோழமையில் வகுப்பில் முதலிடம்
தொழுகையில் அவனுக்கு இல்லை ஒரு இடம்

Encyclopedia வையே கரைத்து குடித்திருப்பான்
எகிப்திலா? என்ன நடக்கிறது? என்பான்.

விடாமல் படித்து விடுவான் என் பிள்ளை
விடுமுறையிலும் தொழ மாட்டான் என் செல்லப் பிள்ளை

மலையில் கூட Tution ஓடி சென்று விடுவான்
ஆனால் மலைக்கும் மத்ரசாவுக்கு ஒதுங்க மாட்டான்

ஆசிரியரை சந்திக்க அரை நாள் கூட ஒதுக்குவோம்
ஆலிம்சாவை சந்திக்க ஐந்து நிமிடமும் கசக்கும்

உன் மகன் என்ன படிக்கிறான்? என் முதல் கேள்வி
உன் மகன் என்ன ஓதுகிறான்? நான் கேட்காத கேள்வி

அத்தனை நாகரிகமும் படித்துள்ளான்
ஆனால் அடுத்தவருக்கு சலாம் சொல்ல மாட்டான்

என் முழு எண்ணமும் அவன் US பயணத்தில்
அதில் ஒரு துளி கூட இல்லை சுவனத்தின் பயணத்தில்

இறுதியாக,

எனக்கு இவ்வுலகில் பெருமை சேர்த்து விடுவான் என் பிள்ளை
ஆனால் நான் இறந்தால் எனக்காக துஆ கேட்பானோ தெரியவில்லை

வஸ்ஸலாம்
அபு அம்மாராஹ்
abuammaarah@yahoo.com

பேஸ்புக்கில் சிதையும் சகோதரத்துவம்

Previous article

மனனமிடுவோம் – பாகம் 1 – இஸ்லாமிய மாதங்கள்

Next article
Sadiq
அஸ்ஸலாமு அலைக்கும் நான் எழுத்தாளன் அல்ல, கவிஞனும் அல்ல, சிறந்த பேச்சாளரோ அல்லது மார்க்க அறிஞனோ அல்ல….. ஆனால் நானும் கொஞ்சம் எழுதுவேன், கவிதை வரைவேன், சிறிது பேசுவேன், மார்க்கம் அறிந்துள்ளேன். இறைவன் தந்த திறமைகளும் எனது சிறிய அறிவும் கொஞ்சமாவது சமுதாயத்துக்கு பயன்படட்டுமே என்ற ஆதங்கத்தில் பிறந்ததே இந்த WEBSITE … நாகரீகத்தின் உச்சியில் இருப்பதாக கூறிக்கொண்டு, கலாசார சீரழிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்த உலகத்தை, பலர் மத நெறிகளின் மூலமும், அன்பின் மூலமும், அஹிம்சை மூலமும், அழகிய நடவடிக்கைகள் மூலமும் திருத்த முயன்று கொண்டிருக்கின்றனர். உறவுகள் பேணப்படாமலும், பிறர் உணர்வுகள் மதிக்கப் படாமலும் மனிதாபிமானம் செத்துக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், ஏழைகள் ஏழைகளாகவும், பணக்காரர்கள் மேலும் பணம் படைத்தவர்களாகவும் மாறிக்கொண்டிருக்கும் இந்த மாயமான உலகில், நிச்சயமாக ஆக்க பூர்வமான எழுத்துக்கள் நல்ல சமுதாயத்தை உண்டாக்க வழி வகுக்கும். அதன் சிறு முயற்சியே இந்த WEBSITE இன்ஷாஅல்லாஹ். இந்த பக்கத்தில் தவறுகள் இருந்தால் மன்னித்து விடுங்கள். நல்ல கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அனுப்பி வையுங்கள். அனுப்ப வேண்டிய முகவரி; abuammaarah@yahoo.com இவன் Mohamed Sadiq

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *