கடன் அட்டைகள். (Credit Cards)
உள்ளூரிலும், குறிப்பாக வெளியூரில் வேலை கிடைத்தவுடன், நமக்கு எதிர் பாராமல் வரும் ஒரு தொலைபேசி அழைப்பு…
Sir, we are calling from …. bank and offering life time credit card…
முதல் அழைப்பில் மறுத்து விடுவோம்.
இரண்டாம் அழைப்பில்… 5% cash back என்றதும் கொஞ்சம் ஆட்டம் காண்போம்.
ஸ்கூல் பீஸில் 10% return, all theme parks 25% தள்ளுபடி என்றதும் இன்னும் கொஞ்சம் ஆட்டம் காண்போம். இறுதியாக நீங்கள் வாங்கும் electeonic பொருள்களுக்கு 12 month EMI இல் (12 மாத தவணையில் பணம் செலுத்தினால் போதும்) என்றதும் க்ளீன் போல்ட்.
இப்படி 5 வருடம் முன் 3 கார்டுடன் சுத்தியவனில் நானும் ஒருவன். யாரும் இது பற்றி தப்பாக சொன்னால் முண்டியடித்து விதண்டாவாதம் பேசுவோம்.
நான் இன்று வரை ஒழுங்கான் திகதியில் பணம் செலுத்தி விடுவேன். வட்டி கட்டியது கிடையாது. எவ்வளவு செலவு குறைகிறது தெரியுமா? யோசித்து பாருங்கள், திடீர் மருத்துவ செலவு வந்தால், credit card எவ்வளவு உதவி, online ticket போட தேவைதானே என்றெல்லாம் சொல்லி பிறர் வாயை அடைத்தோம்.
ஒரு மார்க்க நிகழ்ச்சியில், ஒருவர் கூறும்போது, சிந்தியுங்கள்… நீங்கள் உரிய நேரத்தில் பணம் செலுத்தினாலும், கார்டை வாங்கும்போது நீங்கள் நான் வட்டி கொடுக்க உடன் படுகிறேன் என ஒத்துக் கொண்டுதானே கார்டை பெறுகிரீர்கள் என கேட்டது முதல் அடி. உங்கள் கையில் பணம் இல்லாத போது வட்டி வியாபாரம் செய்யும் வங்கிப் பணத்தில் நீங்கள் பொருள் வாங்கினாள், அது கூடுமா என கேட்டது இரண்டாம் அடி. 100 திர்ஹத்துக்கு, வங்கி 5 திர்ஹம் தந்தால் அது வட்டி, அதையே 100க்கு 5 points தந்து அதற்கு மொத்தமாக voucher தந்தால் அது ஹலாலா என என் நண்பன் கேட்டது இறுதி அடி.
நிய்யத்து நன்றாக வைத்ததோ என்னவோ அத்தனை கார்டையும் விட்டேன். ஆச்சர்யம்…
பணம் கொடுத்து வாங்கும்போது பதமாக தேவையானதை வாங்குகிறோம். கடைகளில் போடும் SALES கண்ணை மறைக்கவில்லை. மருத்துவ செலவுகளை இறைவனே குறைத்தான். Interest free instalement என்று மொபைலும் தொலைக்காட்சிப் பெட்டியும் வாங்கி ஏமாந்த காலம் மாறி, தேவை இல்லாத பொருட்கள் வீட்டை அலங்கரிக்கவில்லை. இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்….
Credit Card நோயிலிருந்து வெளியே வந்து விடுங்கள். இளைய சமுதாயம் சேமிப்பற்று கடனாளியாக இது காரணம், ஆடம்பர போலி வாழ்க்கைக்கு இது அத்திவாரம். பலர் வெளியூரிலிருந்து credit card செலுத்தாமல் நாடு திரும்பி மீண்டும் வெளியூர் வர முடியாத நிலைக்கு இதுவும் காரணம். பல குடும்ப சண்டைகளுக்கு இது இன்னொரு காரணம். இன்னும் சொன்னால் பலர் இதன் minimum due மட்டுமே கெட்டி மாதா மாதாம் நேரடி வட்டியை சாப்பிட்டு கடன் நிலுவையை கூட்டிக் கொண்டே செல்கின்றனர். மொத்தத்தில் நம்மை அறியாமல் பரகத்தை நாம் நம் வாழ்வில் இழந்து விடுகிறோம்.
சிலர் facebook இல் credit card ஐ like செய்து share செய்யும்போது ஒரு கணம் யோசிப்பேன், நாளை இன்னொருவன் இதனால் வட்டி கெட்டும்போது இவருக்கும் தீமை எழுதப்படுமே என்று. சகோதரர்களே, மரணம் வரும் தருணம் நமக்கு credit card dues வேண்டாமே…
சிந்தியுங்கள் செயல்படுங்கள். மீண்டும் உங்கள் credit card ஐ, நியாயப்படுத்த காரணம் தேடாதீர்கள்.
தெரிந்த சிலவற்றை மற்றும் வாழ்வில் credit card ஐ விட்டதால் அடைந்த சுகத்தை பகிர்ந்தேன். இந்த கட்டுரை மூலம் நீஙகள் உங்கள் கார்டை தொலைத்தால், அதில் முதல் மகிழ்ச்சி எனக்கே…
Credit Card ஐ தொலைக்க மன தைரியம் உண்டா??????
வஸ்ஸலாம்
அபு அம்மாராஹ்
முஹம்மது சாதிக்



